ஒற்றைப் பயனர் புகுபதிகை உறுதியாக்க அறிவிப்பு.

This page is a translated version of the page Single User Login finalisation announcement and the translation is 100% complete.
Other languages:

இதன் முன்னேற்றம் குறித்த உடனடி தகவலுக்கு காண்க mw:SUL finalisation.

விக்கிமீடியா அமைப்பின் ஆக்கக்குழு, பயனர் கணக்குகளின் செயல்முறைகளில், விக்கி-ஊடான அறிவிப்புகள் போன்ற, புதிய, சிறந்த கருவிகளை ஆக்கித்தரும்பொருட்டு, சிறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். இம்மாற்றங்களுக்குத் துணை புரிய பயனர்களின் வசம் same account name everywhere இருக்க வேண்டும். இது பதிப்புகளைத் திருத்த உதவும் புது அம்சங்களை உங்களுக்கு வழங்கவும், அவை குறித்து சிறப்பாக விவாதிக்க எங்களுக்கு உதவும். இது குறித்த முன்-நிபந்தனைகளுள் ஒன்று தான் 900  விக்கிமீடியா விக்கிகளின் பயனர் கணக்குகளும் ஒருமித்ததாக இருத்தல் வேண்டும்.

துரதிருஷ்டவசமாக, சில கணக்குகள் தற்போது நமது விக்கிகள் முழுவதும் தனித்துவமாக இல்லை, மாறாக அதே கணக்கு பெயரை கொண்ட மற்ற பயனர்களின் கணக்குகளிடம் மோதும்படியாக உள்ளது. இத்தகைய பயனர்கள் அனைவரும் வருங்காலத்தில் விக்கிமீடியாவின் விக்கிகளைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை உறுதி செய்யும் பொருட்டு இது போன்ற பல கணக்குகளை, “~” மற்றும் அவர்களது விக்கியின் பெயரையும் பின்னிணைத்து, பெயர்மாற்றம் செய்கிறோம். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 2015-இல் நடைபெறும். உதாரணமாக, Swedish Wiktionary-யைப் பயன்படுத்தும் "Example" என்ற பயனரின் பெயர், "Example~svwiktionary" என்று மாற்றம் பெறும்.

எல்லாக் கணக்குகளும் முன்பு போலவே செயல்படும், பயனர்களின் பங்களிப்புகளுக்கு உரித்த மதிப்புகளும் வழங்கப்படும். எனினும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட கணக்குக்களை உடைய பயனர் புதிய பெயரைக்கொண்டே பதிகைக்குள் நுழைய வேண்டி இருக்கும்.

அந்தந்த இடத்தில் வைத்தே பெயர் மாற்றம் செய்வதால் உலகளாவிய கணக்குகள் தொடர்பு அருந்து போவதைத் தவிர்க்கும் பொருட்டு, இவ்வாறு அந்தந்த இடத்தில் வைத்து பெயர் மாற்றம் செய்யும் வசதி நீக்கப்படுகிறது.

மேலும் பார்க்க