விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களுக்கு புகைப்படங்கள் தேவை 2022

This page is a translated version of the page Wikipedia Pages Wanting Photos 2022 and the translation is 96% complete.
Outdated translations are marked like this.

Wikipedia Pages Wanting Photos 2022

Home Participating Communities Organizing Team Participate Results Resources FAQ & Campaign Rules

விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களுக்கு புகைப்படங்கள் தேவை 2022 என்பது வருடாந்திர பிரச்சாரத்தின் மூன்றாவது பதிப்பாகும், இதில் உலகம் முழுவதும் உள்ள விக்கிபீடியா தொகுப்பாளர்கள் அல்லது ஆசிரியர்கள், விக்கிபீடியா மொழித் திட்டங்கள் மற்றும் சமூகங்கள் புகைப்படங்கள் இல்லாத விக்கிபீடியா கட்டுரைகளில் புகைப்படங்களைச் சேர்க்கின்றன. இது பல்வேறு விக்கிமீடியா புகைப்படம் எடுத்தல் போட்டிகள் மற்றும் விக்கிமீடியா சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படமாக்குதல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் மீடியா கோப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். புகைப்படங்கள், வாசகரின் கவனத்தை உரைச் சுவரைக் காட்டிலும் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும், உள்ளடக்கத்தை வளப்படுத்தவும், விளக்கவும் உதவுகின்றன, மேலும் கட்டுரையை மேலும் அறிவுறுத்தும் மற்றும் வாசகர்களை ஈர்க்கக்கூடியதாகவும் அமைகின்றன. விக்கி நினைவுச்சின்னங்களை நேசிக்கிறது, விக்கி ஆப்பிரிக்காவை நேசிக்கிறது, விக்கி உலகத்தை நேசிக்கிறது, விக்கி ஃபோக்லோர்-ரை நேசிக்கிறது போன்ற சர்வதேச புகைப்படப் போட்டிகள் உட்பட பல்வேறு திட்டங்கள், புகைப்படமாக்குதல்களில் இருந்து மற்றும் போட்டிகள் மூலம் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் நன்கொடையாக விக்கிமீடியா பொதுத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த புகைப்படங்களில் சில விக்கிபீடியா கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று, விக்கிமீடியா பொதுத்தளம் மில்லியன் கணக்கான புகைப்படங்களை வழங்குகிறது ஆனால் இவற்றில் ஒரு சிறிய பகுதியே விக்கிபீடியா கட்டுரைப் பக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு பெரிய இடைவெளியாகும், இந்த திட்டம் இவ்வுலகையே இணைக்கக்கூடிய பாலத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எவ்வாறு பங்கேற்பது

பங்கேற்பதற்கு முன், கீழே உள்ள பங்கேற்பு வழிமுறைகளையும் விதிகளையும் முழுமையாகப் படிப்பது அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

  1. நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைச் சரிபார்க்கவும். 2022 பதிப்பில் தகுதி விதிகள் திருத்தப்பட்டுள்ளன, பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருட காலம் நிறைவடைந்த கணக்கை வைத்திருக்க வேண்டும்.
  2. புகைப்படம் தேவைப்படும் கட்டுரையைக் கண்டறியவும். இதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. இங்கே சில குறிப்புகள் உள்ளன.
  3. காமன்ஸில் பொருத்தமான படத்தைக் கண்டறியவும். சரியான தலைப்பு அல்லது வகையைப் பயன்படுத்தி புகைப்படத்தைத் தேடுங்கள். இதை செய்ய பல வழிகள் உள்ளன. இந்த எளிய மீடியா மறுபயன்பாட்டு வழிகாட்டி-யைப் பார்க்கவும். இங்கே கூடுதல் குறிப்புகள் உள்ளன. பொதுவாக கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள நபர்கள், விஷயங்கள், செயல்பாடுகள் மற்றும் கருத்துகளை நேரடியாக சித்தரிப்பதன் மூலம், கட்டுரையின் பொருள் பற்றிய வாசகர்களின் புரிதலை அதிகரிப்பதே புகைப்படத்தின் நோக்கம் என்பதை நினைவில் கொள்ளவும். புகைப்படத்தின் தொடர்புடைய அம்சம் தெளிவாகவும் மையமாகவும் இருக்க வேண்டும். புகைப்படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தலைப்பின் சூழலில் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும், முதன்மையாக அலங்காரமாக இருக்கக்கூடாது.
  4. கட்டுரைப் பக்கத்தில், புகைப்படம் வாசகருக்கு விஷயத்தைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இருக்கும் பொருத்தமான பகுதியைக் கண்டறியவும். தொகு என்பதைக் கிளிக் செய்து படத்தைச் செருகவும், மற்றும் சுருக்கமான தலைப்பைச் சேர்க்கவும் கட்டுரையில் புகைப்படம் என்ன சித்தரிக்கிறது என்பதை விளக்கும்படி எழுதவும். கிடைக்கும் சிறந்த தரமான படங்களைப் பயன்படுத்தவும். மோசமான தரமான படங்கள் - இருண்ட அல்லது மங்கலானவை; விஷயத்தை மிகச் சிறியதாகக் காட்டுவது, ஒழுங்கீனத்தில் மறைந்திருப்பது அல்லது தெளிவற்றது; மற்றும் பல - முற்றிலும் தேவைப்படாவிட்டால் பயன்படுத்தப்படக்கூடாது. எந்தப் படங்கள் விஷயத்தை சிறப்பாக விளக்குகின்றன என்பதைப் பற்றி கவனமாக சிந்தியுங்கள். நீங்கள் கண்டிப்பாக உங்கள் எல்லா திருத்தங்களுக்கும் சுருக்கமான விளக்கத்தை வழங்கவும், "முன்னோட்டம்" மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். படங்களுடன் மேம்படுத்தப்பட்ட அனைத்து கட்டுரைகளின் திருத்தச் சுருக்கத்தில் #WPWP என்ற ஹேஷ்டேக்கைச் சேர்க்கவும். பின்னர் "மாற்றங்களை வெளியிடு" என்பதைக் கிளிக் செய்யவும். தயவுசெய்து பார்க்கவும்: WPWP பிரச்சார ஹேஷ்டேக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டி
  5. புகைப்படத்தின் தொடரியல் குறித்து கவனமாக இருங்கள்! கட்டுரைகளில் உள்ள தகவல் பெட்டிகளில் புகைப்படங்களைச் சேர்க்கப் போகிறீர்கள் என்றால், தொடரியல் மிகவும் எளிதானது - கோப்பு பெயர் மட்டும் போதுமானது, எனவே [[File:Obamas at church on Inauguration Day 2013.jpg|thumb|The Obamas worship at [[African Methodist Episcopal Church]] in Washington, D.C., January 2013]] வெறுமனே இதை மட்டும் எழுதவும் The Obamas at church on Inauguration Day 2013.jpg.

கோப்பு பெயர்கள் மற்றும் தலைப்புகளின் தொடரியல்

A boy playing with a butterfly
ஒரு சிறுவன் பட்டாம்பூச்சியுடன் விளையாடுகிறான்

அடிப்படை உதாரணம் (வலதுபுறத்தில் படத்தை உருவாக்குவதற்கு):
[[File:Cute boy face with butterfly.jpg|thumb|alt=A boy playing with a butterfly|<translate>A boy playing with a butterfly</translate>]]

  • File:Cute boy face with butterfly.jpg கோப்பு (புகைப்படம்) பெயர் சரியாக இருக்க வேண்டும் (முதலெழுத்து, நிறுத்தற்குறி மற்றும் இடைவெளி உட்பட) மற்றும் கண்டிப்பாக சேர்க்க வேண்டியவை .jpg, .png அல்லது வேறு நீட்டிப்பு. (Image: மற்றும் File: அதே மாதிரி தான் வேலை செய்கிறது.) விக்கிபீடியா மற்றும் விக்கிமீடியா காமன்ஸ் இரண்டும் குறிப்பிட்ட பெயருடன் ஒரு படத்தை வைத்திருந்தால், விக்கிபீடியா பதிப்பு தான் கட்டுரையில் தோன்றும்.
  • thumb பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேவைப்படுகிறது
  • alt=A boy playing with a butterfly மாற்று உரை என்பது படத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கானது; தலைப்பைப் போலன்றி, இது படத்தின் தோற்றத்தை சுருக்கமாகக் கூறுகிறது. இது இணக்கமாக இருக்க வேண்டியவை அணுகல் வழிகாட்டுதல்கள் மற்றும் பிரபலமான நிகழ்வுகள், மக்கள் மற்றும் விஷயங்களை பெயரிட வேண்டும்.
  • A boy playing with a butterfly என்பது ஒரு தலைப்பு மற்றும் அது கடைசியாக வரும். புகைப்படம் எதைப் பற்றியது என்பது பற்றிய கூடுதல் தகவலை இது வழங்குகிறது.

கூடுதல் அம்சங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஆங்கில விக்கிபீடியாவில் விரிவாக்கப்பட்ட புகைப்பட தொடரியல்-லைப் பார்க்கவும். நீங்கள் தொடரியலை கவனமாகச் சரிபார்த்த பிறகு புகைப்படம் காட்டப்படாவிட்டால், அது அனுமதிக்கப்படவில்லை என்று பொருள்.

பிரச்சார விதிகள்


புகைப்படங்கள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31, 2022 வரை பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒருவர் பயன்படுத்தக்கூடிய கோப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. இருப்பினும், பல்வேறு வகையான பரிசுகள் உள்ளன. இருப்பினும், விக்கிபீடியா கட்டுரைகளை புகைப்படங்கள் மூலம் சிதைக்க வேண்டாம். புகைப்படம் இல்லாத கட்டுரையில் மட்டும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யவும்.

புகைப்படம் இலவச பயன்பாட்டு உரிமத்தின் கீழ் அல்லது பொதுத்தள பயன்பாட்டிற்காக வெளியிடப்பட வேண்டும்.

பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருட காலம் நிறைவடைந்த பதிவு செய்த பயனர் கணக்கை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள். தகுதிபெற, ஒரு பங்கேற்பாளர் பதிவுசெய்த கணக்கு வைத்திருக்க வேண்டும் (இது எந்த விக்கிமீடியா திட்டத்திலும் இருக்கலாம்) ஜூலை 1, 2021 அன்று அல்லது அதற்கு முன்.


மோசமான அல்லது மிகக் குறைந்த தரத்தினைக் கொண்ட புகைப்படங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாது.

  1. கட்டுரைக்கு ஏற்றதாக படத்தின் தலைப்பும் விளக்கமும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
  2. அனைத்து புகைப்படப் பதிவேற்றத்திலும் புகைப்படம் என்ன என்பதை விவரிக்கும் தலைப்பு இருக்க வேண்டும்.
  3. கட்டுரையில் பொருத்தமான இடங்களில் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும்.
  4. நீங்கள் சரளமாகப் பேசாத மொழியில் உள்ள கட்டுரைகளில் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டாம். தலைப்பு இல்லாத படங்கள், பொருத்தமற்ற படங்கள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் சேர்க்கும் பயனர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

பங்கேற்பாளர்கள் விளக்கமான திருத்தச் சுருக்கத்துடன் கூடுதலாகப் புகைப்படங்களுடன் மேம்படுத்தப்பட்ட அனைத்து கட்டுரைகளின் திருத்தச் சுருக்கம்-இல் #WPWP என்ற ஹேஷ்டேக்கைச் சேர்க்க வேண்டும், உதாரணத்திற்கு "தகவல் பெட்டியில் ஒரு புகைப்படத்தை மேம்படுத்துதல்" #WPWP. ஒரு கட்டுரையில் ஹேஷ்டேக்கை (#WPWP) செருக வேண்டாம். தயவுசெய்து பார்க்கவும்: WPWP பிரச்சார ஹேஷ்டேக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டி

உலகளாவிய பிரச்சார காலவரிசை

  1. ஆரம்ப நாள்: ஜூலை 1, 2022
  2. பதிவுகளுக்கான காலக்கெடு: ஆகஸ்ட் 31, 2022
  3. முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: அக்டோபர் 27, 2022

சர்வதேச பரிசு வகைகள்

  • விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் மேம்படுத்திய முதல் மூன்று பயனர்களுக்கான பரிசுகள்:
  1. முதல் பரிசு ― பிளேக் விருது & WPWP நினைவுகள் + சான்றிதழ்
  2. இரண்டாம் பரிசு ― பிளேக் விருது & WPWP நினைவுகள் + சான்றிதழ்
  3. மூன்றாம் பரிசு ― பிளேக் விருது & WPWP நினைவுகள் + சான்றிதழ்
  • விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளை ஆடியோக்களுடன் மேம்படுத்திய பயனர்க்கான பரிசு:
  1. பிளேக் விருது & WPWP நினைவுகள் + சான்றிதழ்
  • விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளை வீடியோக்களுடன் மேம்படுத்திய பயனர்க்கான பரிசு:
  1. பிளேக் விருது & WPWP நினைவுகள் + சான்றிதழ்
  • புகைப்படங்களுடன் மேம்படுத்தப்பட்ட அதிக விக்கிபீடியா கட்டுரைகளைக் கொண்ட புதிய பயனர்க்கான பரிசு:
  1. பிளேக் விருது & WPWP நினைவுகள் + சான்றிதழ்

விக்கி ஆப்பிரிக்காவை நேசிக்கிறது பரிசு வகைகள்

  • முதல் பரிசு - அமெரிக்க $80 பரிசு அட்டை
  • இரண்டாம் பரிசு - அமெரிக்க $50 பரிசு அட்டை
  • மூன்றாம் பரிசு - அமெரிக்க $30 பரிசு அட்டை

PLEASE PUT #WPWP #WLA in your edit summary!

குறிப்பு: வரவிருக்கும் எந்த ஆன்லைன்/ஆஃப்லைன் விக்கிமீடியா மாநாட்டிற்கும் இந்த பரிசுகள் உதவித்தொகையாக வழங்கப்படும்

மேலும் அறிய Wiki Loves Africa 2022/WPWP-ஐப் பார்வையிடவும்.