நட்பு வெளி கொள்கைகள்

This page is a translated version of the page Friendly space policies and the translation is 62% complete.

நட்புவெளிக் கொள்கைகள் விக்கிமீடியா சமுதாயக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தனிநபர்களுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளாகும். இவை அனைத்துப் பங்கேற்பாளர்களிடமும் நேரிய, ஆக்கநிலையான பட்டறிவை பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றன. நடத்தை நெறிமுறையும் இத்தோடு தொடர்புடையதே. தனிநபர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நடத்தை நெறிமுறையைப் போலன்றி, அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமானது.

விக்கிமீடியா நிகழ்ச்சிகளுக்கான பொதுவான நட்பு வெளிக்கொள்கைகள்

விக்கிமீடியா சமுதாயம் பாலினம், பாலுணர்வுப் போக்கு, பாலின அடையாளப் பரிகசிப்பு அல்லது ஏளனம், மாற்றுத்திறனாளுமை, உடல்தோற்றம், இனம், சமயம் போன்ற பாகுபாடுகளைப் பாராட்டாமல் அனைவருக்கும் நல்லதொரு பட்டறிவைப் பகிர்ந்துகொள்ள தன்னை ஈடுபடுத்திவருகிறது. கருத்தரங்குப் பங்கேற்பாளர்களின் அநாகரிகமான செயல்பாடுகளை பொறுத்துக் கொள்வதில்லை. இந்த விதிமுறைகளை மீறும் பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக முடிவெடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்படுவர்.

அநாகரிகத் தொல்லையின் விளக்கம்

அநாகரிகத் தொல்லைகளில் பின்வருவன அடங்கும்:

  • பாலினம், பாலுணர்வு தூண்டல்போக்கு, பாலின அடையாளப் பரிகசிப்பு, உடல் தோற்றம், உடல் பருமையளவு, இனம், இனக்குழு, அரசியல் சார்வு, சமயம் ஆகியன சார்ந்து தாக்கிப் பேசுதல்.
  • நேரடித் தாக்குதல், அடிதடி, தேவையில்லாமல் பின்தொடர்தல், படமெடுத்தல், பதிவுசெய்தல், தொடர்ந்து ஒருவர் பேசும்போதோ, நிகழ்ச்சிகளிலோ குறுக்கிடுதல்.
  • சூழல் சாராத பாலியற் படங்களைக் காட்டுதல், பொருத்தமற்ற உடற்சீண்டல், வரவேற்கப்படாத பாலுணர்வுக் கவனம் அல்லது நோக்கு

இத்தகைய நடத்தையை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படும்போது பங்கேற்பாளர்கள் உடனடியாக முழுமையாக ஒத்துழைக்கவேண்டும்

திருத்த நடவடிக்கைகள்

விக்கிமீடியா சமுதாய நிகழ்ச்சிகள் தன்னார்வலர்களால் நிறைவேற்றப்படுவதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நட்புவெளிக் கொள்கையைப் பின்பற்ற அனைத்து பங்கேற்பாளர்களையும் சார்ந்துள்ளனர். நீங்கள் தொல்லைப்படுத்தப்பட்டால், பிறிதொருவரும் தொல்லைக்கு உள்ளாவார் என்பதை நினைவில் கொண்டும் அல்லது வேறு பிற அக்கறைகள் சார்ந்தும் உடனடியாக நிகழ்ச்சிப் பணி உறுப்பினருடன் தொடர்புகொண்டு அறிவியுங்கள்.

ஏற்பாட்டாளர்கள் ஒருவரின் நடத்தையைப் பற்றி அறியும்போதோ அதைப் பற்றி தாக்கீது பெறும்போதோ, சூழலுக்கேற்ற நடவடிக்கையை மேற்கொள்வர். இந்நடவடிக்கை உரியவரை அணுகி எச்சரிப்பதாகஅமையலாம்; மேலும் மோசமான நேர்வுகளில் வெளியேறும்படி கேட்டுக்கொள்ள நேரலாம். வன்தொடர்தல் நேர்வுகளில், நிகழ்ச்சி பணியாளர்கள் வெளியேற்றக் காப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்வர்.

அநாகரிகத் தொல்லைப்படுத்தும் நடத்தையுள்ள தனிநபர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளலாம்.

இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சார்பாக முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகலாம்; தேவைப்பட்டால், விக்கிமீடியா சமுதாயத்தை அணுகலாம்.

தொடர்பு விவரம்

கருத்தரங்குக்கு வந்தவர்கள், நெருக்கடி நேரத்தில் பாதுகாப்பாகவும் தொடர்ந்த தொடர்பிலும் இருக்க, பின்வரும் தொடர்பு எண்களை பட்டியலிடுதல் நல்ல பயனைத் தரும்:

  • நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (24 மணிநேரமும் தொடர்பு கொள்ள ஏற்றதாக இருப்பது நல்லது)
  • உள்ளூர் உணவு விடுதி/அவ்விடத்து பாதுகாவலர்
  • உள்ளூர் சட்ட நடைமுறைப்படுத்தல் அலுவலகம்
  • பாலினத் தாக்குதல் புகாருக்கான தொடர்பு எண்
  • உள்ளூர் இயல்புநிலை, நெருக்கடிநிலை மருத்துவப் பணிகள்
  • உள்ளூர் வாடகை ஊர்தி நிறுவனம்/குழுமம்

மேலும் பார்க்க

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒத்த கொள்கைகள்

தொடர்புடைய கொள்கைகளும் பக்கங்களும்:

இணைய நட்பு வெளிக்கான கொள்கைகள்: