விக்கிப்பீடியா 15/செய்தி

This page is a translated version of the page Wikipedia 15/MassMessages/Initial announcement and the translation is 100% complete.

தலைப்பு: விக்கிப்பீடியாவின் 15வது பிறந்தநாள்

விக்கிப்பீடியா மற்றும் விக்கிமீடியா இயக்கத்தின் 15வது பிறந்தநாள் விரைவில் வருகிறது! ஜனவரி 15, 2016 அன்று கொண்டாடுவதற்கு ஆர்வமாகத் திட்டமிட்டு வருகிறோம்.

15வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான திட்டமிடுதலைத் தொடங்க, Metaவில் Wikipedia 15க்காக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக அப்பக்கத்தில் பின்வரும் விடயங்களை வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்:

  1. அருகாமையில் உள்ளவர்கள் 15வது பிறந்தநாளைக் கொண்டாட நிகழ்வுகளையும் சந்திப்புகளையும் திட்டமிட.
  2. பிறந்தநாள் படங்கள், வீடியோக்கள், கட்டுரைகள், விக்கிப்பீடியா உள்ளடக்கம் மற்றும் பிற ஊடகங்களை பகிர்வது பற்றிய மேலும் தகவல்.
  3. உங்கள் நிகழ்வை நடத்துவதற்கான ஊடகத்தை ஏற்படுத்துவதற்கான குறிப்புகள்.

மெட்டா பக்கத்தில் உள்ள பகுதிகளில் பல இப்போது காலியாகவே உள்ளன, ஆனால் ஜனவரியில் நடைபெற உள்ள பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன்பாக அடுத்துள்ள சில மாதங்களில் அதிகமான தகவலைச் சேர்க்க நாங்கள் உங்களோடு சேர்ந்து பணியாற்றுவோம். விக்கிப்பீடியாவின் 15வது பிறந்தநாளில் நீங்கள் காண விரும்புபவற்றைச் சேர்க்க, திருத்த, விவாதிக்க அழைக்கிறோம்!

உங்களுடன் கொண்டாடக் காத்திருக்கிறோம்!

-விக்கிமீடியா பவுண்டேசன் கம்யுனிகேஷன்ஸ் குழு