எழில் ஞான பூஜையும், அருள் தான பூஜையும்

ஜனவரி 22, 2019

   எழில் ஞான பூஜை என்பது ஆன்மீக ஆராட்சி செய்து சூட்சும ரகசியங்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது எழில் ஞான பூஜை ஆகும்.    அருள் தான பூஜை என்பது ஆன்மீக ரகசியத்தை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக அன்பர்களுக்கு தெரியப்படுத்துவது அருள் தான பூஜை ஆகும்.     இறைவனுக்கு எத்தனையோ வகையான பூஜைகள் உண்டு. அதில் மிக சிறந்த பூஜை எழில் ஞான பூஜையும், அருள் தான பூஜையும் ஆகும். இந்த பூஜையின் மூலம் இயற்கை குற்றங்களான மும்மலம், இயற்கை மலம் என்னும் மூல மலம் அழிவதோடு, பாவம், சாபம் ஆகியன அனுபவிக்காமலேயே மிக விரைவாக அழிந்து போகும்.    மேலும் ஆன்மீகத்தில் இறுதி லட்சியமான நிர்வானம் என்னும் சமாதி அடைவது மிக எழிதானதாகும். பிரம ஞானி இரு வகையில் உள்ளனர். 1 தேவதைகளின் தொடர்பு மூலம் ஆன்மீக ரகசியத்தை அறிந்து வெளியிடுதல். 2 தானே தன் மனதையும், ஆன்மாவையும் ஆய்வுக்கு உட்படுத்தி ஆன்மீக ரகசியத்தை உணர்ந்து வெளியிடுதல்.     தானே ஆய்வு செய்து ரகசியத்தை உணர்வது இக்கால கட்டத்தில் மிக சவாலான விசியம் ஆகும். என்றாலும் தன் பகையை ஒழிக்க வேறு மிக வேகமான வழி ஏதுவும் இல்லை. தான் உணர்ந்த ரகசியத்தை பிறருக்கும் தெரிவிக்கும் போது அதி விரைவாக அகப்பகை ஒழிக்கப்படும்.     நமது பாரதத்தில் ஏராளமானோர் அவர் அவர்களின் பானியில் ஆன்மீக ரகசியத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். பாரத பூமி புனித பூமி ஆகும். இங்கு மனிதன் தன் நன் நடைத்தையால் கடவுளாகவே வாழ்ந்து சென்று உள்ளனர். கடவுளின் வழிபாடும் இரண்டு வகையில் உள்ளது. 1 தன் நியாயமான வேண்டுதல்களை வைத்து வழி படும் முறை. 2 தான் எதையும் எதிர் பார்க்காமல் கடவுளை உணர்ந்து தானும் ஆன்மீக சாதனை புரிய ஆய்வு செய்யும் முறை.   இவ்விரு முறைகளுமே தவறு ஒன்றும் இல்லை. அவர் அவர்களால் இயன்றதை தான் செய்ய இயலும். உள்ளதிலேயே கடினமானதும், வேகமானதும் எழில் ஞான பூஜையும், அருள் தான பூஜையும் ஆகும். பிறர் வெளியிடும் ஆன்மீக உண்மையை கேட்டோ, படித்தோ உணர்வதிலும் அதற்க்கு உரிய பலன் உண்டு. எல்லோராலும் ஆன்மீக ஆராட்சியை செய்ய இயலாது.

Return to "Terms of use/ta" page.