பணம் எவ்வாறு செலவு செய்யப்படவேண்டும் என்பதற்கான கணக்கெடுப்பு (Survey )/ கேள்விகள்
2012 பணம் விநியோகித்தல் முன்னுரிமை வழங்குதல் குறித்த கணக்கெடுப்பிற்கு உங்கள் நேரத்தை செலவு செய்தமைக்கு நன்றி. இந்த கணக்கெடுப்பு மூலம் அறக்கட்டளையால், விக்கிமீடியர்களுக்கு என்ன வளங்கள் தேவைப்படுகிறது என்பதையும் மற்றும் என்ன முன்னுரிமையில் என்பதையும் கணிக்க முடியும் (சிலருக்கு நிதி தேவைப்படலாம்). அனைத்து அறக்கட்டளை நிகழ்ச்சிகளும் இங்கே இருக்காது (அடிப்படை செயல்பாடுகள் குறிப்பாக விலக்கப்படுகின்றன) – தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது அத்தியாயங்கள் (chapters) போன்ற விக்கிமீடியாவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கேட்கும் வளங்கள் மட்டும்.
நீங்கள் (அல்லது அத்தியாயங்கள் அல்லது சங்கங்கள் போன்ற குழுக்கள்) எதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்வது, மற்றும் விருப்பத்தேவுகளை உங்கள் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் ஆகியவையே இங்கு முக்கிய நோக்கங்களாகும். நாங்கள் இந்த பட்டியலில் "சேவகன்களை செயல்பாட்டில் வைத்திரு" போன்றவைகளை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை, ஏனெனில் அவை தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் எந்த பணம் வழங்குதல் முன்னுரிமையை பங்களிப்பாளர்கள் ஒத்துக்கொள்வார்கள் அல்லது ஒத்துக்கொள்ளமாட்டர்கள் என்பதை எங்களுக்கு சொல்வதே ஆகும்.
இந்த கணக்கெடுப்பை முடிக்க அநேக பேருக்கு 15 நிமிடங்களுக்குள்ளகாவே ஆகிறது. உங்கள் தனிநபர் பதில்கள் தனிப்பட்ட முறையில் ரகசியமாக பாதுகாக்கப்படும், ஆனாலும் சில முடிவுகள் ஒட்டுமொத்த சூழலில் பகிரப்படும். வெளியிடப்படும் கணக்கெடுப்பு முடிவுகள் எந்தவொரு தனிப்பட்ட அடையாளங்கானும் விவரங்களையும் கொண்டிருக்காது.
"இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம், நீங்கள் எங்களுக்கு உங்கள் பதில்களை பதிவு செய்ய அனுமதி வழங்குகிறீர்கள், மேலும் அவற்றை பொது களத்தில் வழங்கவும் ஒத்துக்கொள்கிறீர்கள். இது எங்களை, திறந்த ஆய்வு, ஆராய்ச்சி, மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்காக உங்கள் பதில்களை மற்றவர்களுடன் பகிர அனுமதிக்கிறது. இந்த கணக்கெடுப்பு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், அல்லது மின்னஞ்சல் போன்ற விவரங்களை கேட்காது, மேலும் நாங்கள் சட்டப்படி தேவைப்படும் தகவல்களை தவிர எவ்வித தனிப்பட்ட அடையாளங்கானும் தகவல்களையும் வெளியிடமாட்டோம். இந்த ஈடுபாடு நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை கேட்காத கேள்விகளில் தங்கள் தனிப்பட்ட விவரங்களை சேர்க்க மாட்டீர்கள் என உறுதிசெய்கிறது."
"விக்கிமீடியா ஒரு உலகளாவிய நிறுவனம். எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், இந்த திட்டத்தின் நோக்கத்தை செயல்படுத்த தேவைப்படும் என்பதால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மற்ற இடங்களுக்கு உங்கள் பதில்களை அனுப்ப நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்."
நீங்கள் 13 வயதிற்க்குட்பட்டவராக இருந்தால் இந்த கணக்கெடுப்பிற்கு பதிலளிக்க வேண்டாம்.
- எந்த மொழியில் நீங்கள் அடிக்கடி தொகுத்தலை செய்வீர்கள்?
[ list of 20 languages ] |
---|
|
- எந்த திட்டத்தில் நீங்கள் அடிக்கடி தொகுப்பீர்கள்?
- விக்கிப்பீடியா
- விக்கிசெய்திகள்
- விக்கி மூலம்
- விக்சனரி
- விக்கி புத்தகம்
- விக்கி மேற்கோள்
- விக்கிப்பல்கலைக்கழகம்
- மற்றவை
- எந்த நாட்டில் நீங்கள் வசிக்கிறீர்கள்?
[ list of 194 countries ] |
---|
|
- நீங்கள் முதன்மையாக செய்யும் பணியை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்? (3 வரை தேர்ந்தெடுக்கவும்)
- உள்ளடக்கம் உருவாக்குதல் (எ.கா., கட்டுரைகளை எழுதுதல் மற்றும் சீரமைத்தல், படங்களை எடுத்தல், மேலும் பல.)
- உள்ளடக்கம் சரிசெய்தல் (எ.கா., உள்ளடக்கத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாக்குதல், இலவச வளங்களை கண்டுபிடித்து திட்டங்களில் பதிவேற்றுதல், மேலும் பல.)
- உள்ளடக்கம் மதிப்பிடுதல் (எ.கா., புது பக்கம் ரோந்திடுதல், படம்/ உரையின் தரத்தை மதிப்பிடுதல், மேலும் பல.)
- திட்ட நிர்வாகம்(எ.கா., எரிதக் கண்காணிப்பு, நிர்வாகி செயல்பாடுகள், பயனரைச் சரிபார்த்தல், அதிகாரி(functionary).)
- பங்களிப்பாளர் / தொகுப்பாளர் ஆதரவு (எ.கா., மத்தியஸ்தம், சர்ச்சையை தீர்வுசெய்தல், உதவித் தடங்கள்(channels), மேலும் பல.)
- வாசகர் ஆதரவு (எ.கா., OTRS, மேலும் பல.)
- சமுதாயத்தை அணுகுதல் (ஏ.கா., கல்வி நிகழ்ச்சிகள், GLAM, மேலும் பல.)
- உள்கட்டமைப்பு இயக்க ஆதரவு (எ.கா., அத்தியாயங்கள், அத்தியாய செயற்குழு, OTRS அனுமதி தடங்கள், மேலும் பல. )
- தொழில்நுட்பம் (எ.கா., மீடியாவிக்கி குறியாக்கம், தானியங்கி எழுதுதல், மேலும் பல.)
- மற்றவை (தயவுசெய்து விவரிக்கவும்)
- பங்களிப்பாளர்கள் அல்லது குழுக்களுக்கு உதவக்கூடிய சிலவற்றின் பட்டியல் இங்கே உள்ளது. உங்களிடம் இந்த பட்டியலை பற்றி பல கேள்விகள் கேட்கப்படும், அதனால் தயவுசெய்து இதை முழுமையாக படிக்கவும்.
- பொருள்சார்ந்த மேற்கோள் வேலைகளை அணுகுதல் (எ.கா., புத்தகங்கள்)
- பொருள் சாராத மேற்கோள் வேலைகளை அணுகுதல் (எ.கா., இதழ் கட்டுரைத் தரவுத்தளங்கள் )
- பொருட்சார்ந்த கருவிகளை அணுகுதல் (எ.கா. படம்பிடிகருவி, வருடி)
- சிறந்த மென்பொருள் கருவிகளை அணுகுதல் (எ.கா., படம் திருத்துதல், ஒலிக்கோப்பு திருத்துதல்)
- பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்த அணுகுதல் (எ.கா., எழுதுதல், படம் எடுத்தல், வரைபடம் உருவாக்கல்)
- தொழில்நுட்ப கட்டமைப்புகளை அணுகுதல் (எ.கா., டூல்சர்வர், விக்கிமீடியா லேப்ஸ், keys for using commercial APIs)
- செலவை ஈடு செய்ய பணம் வழங்குதல் (எ.கா., உள்ளூர் பயணம், அனுமதி கட்டணம், நகல் எடுத்தல் / மீளப்பெறுதல் கட்டணங்கள்)
- தனிநபர்கள் அல்லது சமுதாய குழுக்களுக்கு சட்ட பாதுகாப்பு
- தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு சட்ட ஆலோசனை (எ.கா., பதிப்புரிமை, அவதூறு)
- விற்பனைப் பொருட்கள் அல்லது பரிசுகள் கொடுக்க (எ.கா., T-shirts, buttons)
- விக்கிமேனியா மற்றும் மற்ற விக்கிமீடியா சார்ந்த நிகழ்வுகளுக்கான பயணத்திற்கு பணம் வழங்குதல்
- சிறிய நிகழ்வு அல்லது போட்டியை நடத்த அல்லது பெரிய நிகழ்வில் பங்கேற்க பணம் வழங்குதல் (எ.கா., உணவு, அறை அல்லது சாவடி செலவு, பதாகைகள் )
- பெரிய நிகழ்வு அல்லது போட்டியை நடத்த பணம் வழங்குதல் (எ.கா., இடம், விளம்பரம், விளம்பர பொருட்கள், உபகரணங்கள் வாடகை )
- தன்னார்வலர்கள் முறையில் செய்ய இயலாத, குறுகிய கால சமூக முன்முயற்சிகக்கு நேரம் ஒதுக்க தனிநபர்களுக்கு நிதி வழங்குதல் (எ.கா., ஆராய்ச்சி திட்டம், போட்டிகளை நடத்துதல்)
- கூட்டு செயல்பாடுகள் / முன்முயற்சிகள் / நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு விக்கிப்பீடியா/விக்கிமீடியா சின்னங்களை பயன்படுத்த அனுமதி
- தேவைப்படும் இடங்களில் உண்மையான ஆராய்ச்சி நடத்த பணம் வழங்குதல் (விக்கிசெய்தி நேர்காணல்கள், வாய்மொழி வரலாறுகள், மேலும் பல)
- உலகளாவிய அல்லது உள்ளூர் திட்ட பதாகைகளை அணுகுதல் (எ.கா., ஆராய்ச்சி அல்லது ஆட்தேர்வு நோக்கங்களுக்காக)
- இங்கே பட்டியலிடப்படாத, உங்கள் வேலையை செய்ய உங்களுக்கு அல்லது மற்ற தன்னார்வலர்களுக்கு தேவைப்படும் என நீங்கள் நம்பும் வேறு ஏதாவது வளங்கள் உள்ளனவா? தயவுசெய்து அவற்றை பட்டியலிடுங்கள். (உங்கள் உருப்படிகள் ஆங்கிலத்தில் இல்லையெனில் உங்களால் முடியுமெனில் தயவுசெய்து அவற்றுக்கான கூகிள் மொழிபெயர்ப்புகளை சேர்க்கவும் )
- 0 லிருந்து 10 வரை அளவுகோலாக எடுத்துக்கொள்ளுங்கள்,0 எனில் "கண்டிப்பாக கொடுக்கவே கூடாது" மேலும் 10 எனில் "முற்றிலும் சிக்கலானது கண்டிப்பாக கொடுக்க வேண்டும்" . இந்த அளவுகோலைப் பயன்படுத்தி இங்கு பட்டியலிடப்பட்ட அனைத்து வளங்களுக்கும், அவை விக்கிமீடியா அமைப்பின் ஒட்டுமொத்த வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மதிப்பிடுங்கள். நீங்கள் ஒரு தடவைக்கு மேல் எண்களை பயன்படுத்தலாம்.
- இங்கே அதே வளங்களின் பட்டியல் உள்ளது. நீங்கள் ஒருநாள் இதை அணுக முயல்வீர்கள் என நினனக்கும் ஒவ்வொரு வளங்களையும் தயவுசெய்து குறிக்கவும்.