தன்னார்வலர் மறுமொழி அணி/ஆளெடுப்பு
OTRS has been renamed. Please help with the updated translations, and do not move the pages yourself. For more information, see the Phabricator task. |
![]() |
Volunteer Response Team |
For prospective volunteers |
தன்னார்வலர் மறுமொழி அணியில் ஆர்வத்துடன் இணைந்தமைக்கு நன்றி. நாங்கள் இந்த அணியில் தன்னார்வலரை எப்பொழுதும் எதிர்நோக்குகிறோம். இப்பக்கத்தில், இவ்வணியின் உறுப்பினர் செய்யக்கூடியவைகளையும், அவ்வுறுப்பினரே வளந்தேட்ட முகவராகத் திகழ வேண்டியவருக்கானத் தகுதிகளும், விண்ணப்பிக்கும் முறையும் விளக்கப்படுகிறது.
இத்தன்னார்வலர் செய்யக்கூடியன யாவை?
இத்தன்னார்வலர்கள் உள்வரும் (Wikimedia Foundation ) மின்னஞ்சல்களைக் கையாள்வர். இம்மின்னஞ்சல்களில் பலவித குறைகளும், குற்றச்சாட்டுகளும் அடங்கும். அதாவது, எளிமையான விக்கிப்பக்கங்களில் செய்யப்படும் பொறுப்பற்ற, தொடர்பற்ற பதிவுகள், எரிதம், கருத்து வேறுபாடுகளை உடைய, ஒருபக்கச்சார்ப்புடையகள் கட்டுரை/கள், தொடர்ந்து கேட்கப்படும் வினாத்தொகுப்புகள் போன்றவற்றிகளைக் கையாள அதீதபொறுமைத் தேவைப்படுகின்றன, எடுத்துக்காட்டாக:
- வாடிக்கையாளர் : “நண்பா, இந்த படம் உண்மையில் எனக்குரிமையான படம், அதை விக்கிப்பக்கத்தில் இருந்து நீக்க இயலுமா?”
- இவ்வணி முகவர்: எந்த விக்கித்திட்டத்திலுள்ள, எந்த படம்? அப்படம், உங்களுக்கு உரிமையான படம் என்பதற்கான சான்றினைப் பகிரும் இணைப்பைத் தாருங்கள்.
இவ்வணியின் கட்டக முறைமையானது, பல சாரைசாரையான மின்னஞ்சல் தனித்தொகுப்புகளைப் பெற்றிருக்கின்றன. அவைகளுக்குத் தேவைப்படும் மொழியாண்மையால் தொடர்புடையை விக்கித்திட்டங்களிலோ, இவ்வணியின் அனுபவம் வாய்ந்தவர்களோ பதிலளிப்பர். மிகப்பெரிய மின்னஞ்சல் சாரைத்தொகுதியாக ஆங்கிலத்(info-en) தொகுதி இருக்கிறது. மேலும், இந்த ஆங்கிலத் தொகுதியானது, தன்னார்வலர் எளிமையாக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, எளிமையான தீர்வுகளைத் தரவல்லது முதல் சிக்கலான தீர்வுகளை எதிர்நோக்குபவை வரை, பல சிறுசிறுதொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். தீர்வுகள் எப்பொழுதும் பலபடிநிலைகளுக்குப் பிறகே தீர்க்கப்படும். இம்முன்னணி சாரைத்தொகுதியில், சில அதிக போக்குவரத்துள்ள விக்கிப்பக்கங்களானது, அதிக பங்களிப்பாளர்களின் கருத்துக்கேட்புகளுக்கும் விடப்படும்.
தன்னார்வலர் மறுமொழி அணிக்கு வரும் ஆங்கில மின்னஞ்சல் சீட்டுகளுக்கு("tickets") பதிலிடுதல் என்பது அதிக மனஅழுத்தம் தரக்கூடியவையாகும். நடுநிலைமையற்ற எடுத்துக்காட்டாக, மனமுடைந்த, சான்று அற்ற, புரியாத, மரியாதை தராத, சட்ட முறையீட்டாளர்களே அதிகம். இருப்பினும், குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுமிக்க முறையீட்டாளருக்கு தீர்வு தருதல் என்பது விக்கியரின் பாராட்டுக்கு உரியது. இதனால் பொதுமக்களுக்கு விக்கிமீடியா குறித்த உயர்வான தோற்றம் உண்டாகும். அனைத்து முறையீடுகளையும், நம் அணியால் தீர்க்க முடியாவிட்டாலும், நமது நடுநிலையான தேர்ந்த அணுகுமுறைகளும், பொறுப்புகளும் முறையீட்டாளர்களின் மனதில் ஈர்ப்பை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகபடுத்தும். எனவே, இவ்வணி குறித்தத் தேவைகளை பலரிடம் பரப்புரை செய்யுங்கள். நீங்களும் இந்த அணியில் இணைந்து உதவிட முடிவெடுங்கள்.
இவ்வணியின் சிறந்த தன்னார்வலன் பெற்றிருக்க வேண்டியன யாவை?
நாங்கள் எப்பொழுதும் புதிய தன்னார்வலர்களை, இவ்வணி மின்னஞ்சல் சீட்டுகளுக்கு பதில் அளிக்க உதவி புரிய, வரவேற்கிறோம். எனினும், மின்னஞ்சல் சீட்டுகளைத் தேர்ந்தெடுக்க, தரமான தீர்வுகளை எடுக்க, கமுக்கமான இயல்பான போக்குகளும் உள்ளன. இவ்வணியின்VRTS administrators மேலாண்குழுவில் இருக்கும் மிக நம்பிக்கையான, அதிக அனுபவமிக்க தன்னார்வலரில் ஒருவர், உங்கள் விண்ணப்பத்தினை, இவ்வணியில் இணைக்க ஆய்வார்.க்க அந்த ஆய்வில், விக்கிமீடியத்திட்டங்களில் உங்களது பங்களிப்புகளையும் கணக்கில் கொண்டு, உங்களை இவ்வணியில் இணைக்க முற்படுவார்.
நாங்கள் எதை எதிர்பார்க்கிறோம்?
அனைத்துத் தன்னார்வலர்கள்:
- விக்கிமீடிய இயக்கத்தின், இந்த தன்னேற்புத் திட்டம் குறித்த நேர்மறையான மனஅணுகுமுறைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- புதியவர்களுக்கான கடும்போக்குகளைப் பின்பற்றிய பங்களிப்பு வரலாறுகளைப் பெற்றிருத்தல் கூடாது. ஏனெனில், இந்த அணியை அணுகும் பெரும்பாலானவர்கள், விக்கிமீடியராகப் பங்களிப்பு செய்யாதவர்களாகவோ, புதியவர்களாகவோ இருக்கின்றனர்.
- இதன் தன்னார்வலர், அவர் பங்களிக்கும் விக்கித்திட்டங்களில் நல்ல அணுகுமுறைகளைப் பெற்றிருப்பவராக இருத்தல் வேண்டும்.
- சரியான காரணகாரியமற்ற, சினமுள்ள பங்களிப்பாளர்களிடம் இணக்கமான அணுகுமுறைகளைப் பின்பற்றிய பங்களிப்பு வரலாறுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து விதமான அனுபவமுடையப் பங்களிப்பாளர்களையும், தன்னார்வலர்களாக ஏற்கிறோம். குறிப்பாக, நீங்கள் கூறுவதற்கு அணியமாக இருந்தால், நாங்கள் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.
- இவ்வணியின் மின்னஞ்சல் முறைமை முகவர் (VRTS) இல்லாத அல்லது ஒரு சில மேலணுக்கர் (sysop) உள்ள சிறிய அளவுள்ள விக்கிமீடியத் திட்டங்களில் இருந்து, தன்னார்வலர் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
- விக்கிப்பீடியா நடைமுறைகளை நன்கறிந்தவர், அடிக்கடி எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலும். சில பொதுவான பொறுப்புகள் Ref Desk சான்றுடையன; நீக்குதலுக்கான விளக்கமுறைகள அல்லது மாற்றியமைக்கத் தேவையான தொகுத்தல் முதலியனவாகும். இவ்வணியின் வழிமுறைகள் விக்கித்திட்டங்களில் அன்றாடம் பயன்படும் ஆலமரத்தடி, ஒத்தாசைப் பக்கம் போன்றதே. எனவே, உங்களின் உதவும் மேலாண்மைப் பங்களிப்புகளை, இவ்வணிக்கும் தருக!
- பனுவல்களுக்கும், ஊடகங்களுக்கும் ஏற்புடைய உரிமம் குறித்த அடிப்படை அறிவு கொண்டு பிணக்குகளை ஆய்தல். பல பிணக்குள் அடிக்கடித் தீர்க்கப்படுபவை எனினும், மூல ஆவணத்தைத் தரும் புதியவர்கள் அல்லது மக்கள் கொடுக்கும் உரிம ஒப்புதலானது தெளிவற்றோ, போதுமான சட்ட வாக்கியங்கள் குறையுள்ளதாகவோ இருக்கும்.
- வாழும் மனிதர்களுக்கான கொள்கைகள் குறித்த அடிப்படைகளை அறிந்தவர்களாகவும், நிறுவனங்கள் குறித்த இலச்சினைகள், சிறு செய்திகள் அல்லது ஒரு பக்கச் சார்ப்பு, சான்றற்ற தெளிவின்மை குறித்த சட்ட முறைகளையும் அறிந்து இருக்க வேண்டும்.
- ஆங்கிலம், மற்றொரு மொழி என இரு மொழியிடை முறையீடுகளுக்கான உதவி தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழ் கட்டுரை மீதான முறையீடுகளை , ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால், தமிழ் கட்டுரையைப் படிப்பவரே ஆங்கில குற்றச்சாட்டை அறிய முடியும்.
- வரும் பிணக்குகளை சரியான, இவ்வணியின் சரியான தீர்வாளருக்கு அளிக்க, அதற்குரியப் பொருத்தமான மின்னஞ்சல் வரிசைத் தொகுப்பில் இணைக்கும் அறிவினைப் பெற்றிருக்க வேண்டும்.
இருந்த போதிலும், இங்கு விவரிக்கப்பட்டவை முழுமையானவையல்ல. எனவே, இங்கு விவரிக்கப்படாதவைகளை நீங்கள் உங்களின் அனுபவத்தில் அறிந்திருப்பின், அதனையும் செயற்படுத்தவும். இவ்வணிக்கு வரும் மின்னஞ்சல் சாரைத்தொகுப்புகளின் அமைப்பு முறைமையை அறிந்து அணுக வேண்டும். ஆனால், அனைத்திற்குமான திறனையும், நீங்கள் அறிந்திருக்க வேண்டியதில்லை. இறுதியாக, இவ்வணிக்கு வரும் சிக்கலான பிணக்குகள், பெரும்பாலும் உரிய குழு கலந்துரையாடல்களுக்கும், ஒத்துழைப்புகளுக்கும் பிறகே தீர்க்கப்படுகின்றன.
தன்னார்வலராக மாற, நான் எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கூறப்பட்ட செய்திகளைப் புரிந்தமையால், நீங்கள் இவ்வணியில் உறுப்பினராக விரும்புகிறீர்களா? ஆம். எனில், மிக்க மகிழ்ச்சி! VRT/Volunteering என்ற பக்கம் சென்று, அங்கு மேலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அப்பக்கத்தின் விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கவும்.
இணைய தொடர் அரட்டையில் (IRC) நான் உதவலாமா?
‘உதவுக!’ உங்களால் இவ்வணிக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க அணியமாக இல்லையெனில், நீங்கள் இணைய அரட்டை அரங்கில் (#wikimedia-vrtconnect IRC channel) இணைந்து பங்களிக்கலாம். இவ்வரட்டை அரங்கினுள்ள அனைத்து உறுப்பினர்களும் “உரியபதில்” அளிப்பார்கள். எனவே, அவர்களுடன் இணைந்து சிறிய இலக்குகளை முடித்து, அவர்கள் விரைந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க உதவலாம்.
- BLP கொள்கையின் கீழ் வரும் கட்டுரையொன்றை மாற்றி எழுதுதல்
- விக்கிமீடிய அறக்கட்டளைத் திட்டங்களில், விக்கிப்பீடியா திட்டம் உட்பட, இருக்கும் கட்டுரை ஒன்றை நீக்குதல்
- விக்கிமீடியாப் பொதுவகத்தில் கோப்பு ஒன்றை நீக்குதல்
இங்கு விவரிக்கப்பட்டவை அனைத்தும் முழுமையானவை அல்ல. இச்சூழ்நிலையில், இவ்வணியில் இணையும் தன்னார்வலரான உங்களுக்கு, தீர்வுகளைத் தரவல்ல தனித்திறமையோ, அனுமதியோ பெற்றிருப்பின், தயங்காமல் இதற்குரிய அரட்டைப்பிரிவில் (IRC) தெரிவியுங்கள். நீங்கள்தெரிவிக்கும் செய்தியானது, இவ்வணியின் முகவர்களுக்கு, அக்குறிப்பிட்ட மின்னஞ்சல் சீட்டினைத் தீர்க்க வழிவகுக்கும்.
ஏதேனும் வினாக்கள்?
உங்கள் எண்ணங்களை, அருள்கூர்ந்து தயங்காமல், Talk:Volunteer Response Team என்ற பக்கத்தில் இடலாம் அல்லது மின்னஞ்சல் ஒன்றை, இந்த அணியின்(VRTS) மின்னஞ்சலுக்கு (volunteers-vrt wikimedia.org) அனுப்பலாம் அல்லது லிபரே(Libera IRC) வலையகத்தின் இணையத் தொடர் அரட்டை அரங்கிலும்(#wikimedia-vrtconnect) உங்கள் வினாக்களைக் கேளுங்கள்