Indic Wikisource Proofreadthon August 2021/Messsage/Ta

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 edit

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!